skip to Main Content

பயணிகளின் நலன் கருதியும் சங்கத்திற்கென வருமானம் ஒன்றினை ஈட்டும் முகமாகவும் சங்கத்தினால் தங்குமிடவசதிகள் வழங்கப்படுகிறது. 09 சாதாரணஅறைகளும் 06 இணைந்த குளியலறையுடன் கூடிய அறைகளும் நாளாந்த வாடகைக்கு வழங்கப்படுகின்றது.

1995ம் தொடக்கம் 2000ம் ஆண்டு வரை வன்னி பெருநிரப்பரப்பில் வாழும் மக்கள் தமதுதேவைகளை பூர்த்தி செய்வதற்குவவுனியா நகருக்கு வரவேண்டிய கட்டாயம் இருந்தது அதேநேரம் அவர்கள் 2 அல்லது 3 நாட்டகள் வவுனியாவிலே தங்கவேண்டிய தேவை இருந்தபொழுது சங்கம் தனதுசேவையினைகுறைந்தசெலவில் அவர்களுக்குவழங்கியது.

தங்கும் பயணிகளுக்கு தேவையான உணவுகளை பெறுவதற்கு ஒரு சிற்றுண்டி சாலையையும் தொலை தொடர்பு வசதிகளை ஏற்ப்படுத்துவதற்கென ஒரு தொலைத் தொடர்பு நிலையத்தினையும் சங்கவளவில் ஏற்ப்படுத்திஅம் மக்களின் தேவைகளை பூர்த்திசெய்ததுடன் சங்கத்திற்கென ஒரு வருமானத்தையும் பெற்றுக்கொண்டது. அக் காலப்பகுதியில் நூற்றுக்கு மேற்ப்பட்டோர் ஒருநாளில் தங்கி தமது தேவைகளைப் பூர்த்திசெய்தனர்.

நிபந்தனைகள்.

1. அனுமதிக்கும் நேரம் – மாலை 03.00 மணி
திருப்பிஒப்படைக்கும் நேரம் – மறுநாள் காலை 10.00 மணி

2. கட்டணங்கள்

  ஒருவர் மட்டும் இருவர் மட்டும்
சாதாரணஅறை  ரூபா 750.00 ரூபா 1,000.00
இணைந்தகுளியலறை ரூபா 1500.00

 

ரூபா 2,000.00

 

 

3. சங்கவளாகத்தில் மது பாணம் பாவித்தல்,மாமிசஉணவுகளை உட்கொள்ளல், புகை பிடித்தல் என்பன தவிர்கப்படவேண்டும்.

4. தங்குபவர்கள் கட்டாயம் அடையாள அட்டையினை காண்பித்து தமது பதிவுகளை மேற்கொள்ளவேண்டும்

5. பதிவுகளை மேற்கொண்டபின் தமக்குரிய கட்டணத்தினை செலுத்தி பற்றுச் சீட்டினை பெற்றுக் கொள்ளவேண்டும்.

Back To Top