skip to Main Content

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர்  சங்கக் கீதம்

பல்லவி

வவுனியா நகரினில் வளர்ந்ததோர் நிறுவனம்

வாழிய வாழியவே

வளம் பெறுஞ் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம்

வாழிய வாழியவே!

(வவுனியா)

அனுபல்லவி

அவனியில் புகழுடன் அருமைகள் பலவுடன்

வாழிய வாழியவே

ஆண்டுகள் பலப்பல அருந்தொண்டு ஆற்றியே

வாழிய வாழியவே

(வவுனியா)

சரணம்

இந்து சமயத் தொண்டும் – தமிழ்

இலக்கிய சமூகத் தொண்டும்

வந்த துயர் துடைக்கும் – பல

வகைகளில் தொண்டுஞ் செய்து

 

அறநெறிப் பாட சாலை – சிறுவர்

ஆரம்பப் பாட சாலை

அருள்நெறிப் பிரசங் கங்கள் – நல்ல

ஆத்மீக வழி காட்டல்கள்

 

தங்கும் இட வசதி – பெரும்

தர்ம நிதி உதவி

எங்கும் புகழ் விளங்க – நல்ல

ஏற்ற மொடு செழித்து

(வவுனியா)

 

– கவிஞர் அகளங்கன் –

 

Back To Top