skip to Main Content

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் திருமண மண்டபம்  அமைக்கப்பட்டு சேக்கிழார் மண்டபம் என்ற பெயரில் இப்போது பயன்படுகின்றது.

முதல் மாடியின் வேலைகள் பூர்த்தியாகி 12-06-1999ல் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைமைச் சுவாமிகள், சுவாமி ஆத்மகனாநந்தா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. கலாசார மண்டபம் என அழைக்கப்படும் இம்மண்டபம் மங்கலச் சடங்குகளுக்கும் மற்றும் பல்வேறு விழாக்களுக்கும் பயன்படுகின்றது. இம்மண்டபம் பெருமளவுக்கு சகல வசதிகளையும் கொண்ட திருமண மண்டபமாகப் பாராட்டப் படுகின்றது.

திருமண மண்டப பாவனைக்கான அறிவுறுத்தல்கள் 

 அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு, நிகழ்வுகளுக்கு மண்டபம் வழங்கப்பட மாட்டாது.

 உணவுகள், கேக் என்பன வழங்கும் போது சைவ உணவாக இருக்க வேண்டும்.

 

திருமணம், பூப்பனித நீராட்டு விழா

 திருமணம், பூப்பனித நீராட்டு விழா என்பவற்றிற்கான மண்டப வாடகையாக ரூபா. 30,000.00 அறவிடப்படும்.

 எமது சங்கத்தில் பெற்றுக்கொண்ட விண்ணப்ப படிவத்தினை பூரணமாக பூர்த்தி செய்து மீளப்பெறமுடியாத முற்ப்பணமாக ரூபா 10,000.00 துடன் சங்க அலுவலகத்தில் ஒப்படைப்பதன் மூலம் பதிவு செய்யலாம்.

 நிகழ்வு நடைபெறும் தினத்திற்கு ஒரு கிழமைக்கு முன்பதாக மீதிப் பணத்தினையும் செலுத்தியிருக்க வேண்டும்.

 மண்டபத்துடன் ஏனைய வசதிகளாக முத்து மணவறை, கும்பம், உறையுடன் கூடிய கதிரைகள் என்பன ஒழுங்கு செய்து தரப்படும்.

 வெளியிலிருந்து நிகழ்வுகளுக்கு தேவையான உணவுகளை கொண்டு வருவது தவிர்க்கப்பட்டுள்ளது.

  • எமது சைவ உணவகத்தில் தேவையான உணவுகளைப் பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் நியாயமான முறையில் தரமான உணவுகளை வழங்குவார்கள். உணவுக்குரிய பணத்தினை சங்க அலுவலகத்தில் நிகழ்விற்கு 3 நாளைக்கு முன் செலுத்த வேண்டும்.
  • உணவானது சங்கத்தினால் தயாரித்து வழங்கப்படும். 300 உணவிற்கு மேலாயின் ரூபா.700.00 ஆகும். ( உணவிற்குரிய விபரப் பட்டியலை சங்கத்தில் பார்வையிடவும்)

 இந் நிகழ்வுகளுடன் இசைக் கச்சேரிகள் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்படாது.

 மண்டபத்தில் முன் ஆயத்தம் (கோலம் போடுதல்) செய்வதாயின் முதல் நாள் இரவு 08.00 மணிக்கு முன்னர் நிறைவு செய்யவேண்டும்.

 செலுத்தும் பணத்திற்குரிய பற்றுச் சீட்டுக்களை தவறாமல் பெற்றுக் கொள்ளவும்.

 குருக்கள்  , மேளம், குலையுடன் கூடிய வாழை என்பit XOq;F nra;J jug;gLk.

 புதிய வகை மணவறைகள் விரும்பின் தாங்கள் ஒழுங்கு செய்ய அனுமதியுண்டு.

ஏனைய நிகழ்வுகளுக்கு 

 ஏனைய நிகழ்வுகளாயின் கூட்டங்கள், கலந்துரையாடல்கள் முதல் 3 மணித்தியாலயத்திற்கு ரூபா 8,000.00 மும் மேலதிக நேரத்திற்கு மணித்தியாலயத்திற்கு ரூபா. 2,000.00 மும் அறவிடப்படும்.

 பிறந்தநாள்,அந்தியேட்டி போன்ற நிகழ்வுகளுக்கு முதல் 3 மணித்தியாலயத்திற்கு ரூபா 8000.00 மும் மேலதிக நேரத்திற்கு மணித்தியாலயத்திற்கு ரூபா. 2000.00 மும் அறவிடப்படும்.

 ஓலி பெருக்கி வசதி உண்டு ( 2 மைக்)

 கும்பம், குத்துவிளக்கு போடியம் என்பன வழங்கப்படும்.

 குறித்த தினத்தில் நிகழ்வுகளை நடாத்த முடியாது போனால், போதிய நியாயமான காரணமா இருந்தால் மட்டுமே முற்ப்பணம் அடுத்த ஆட்சி மன்ற கூட்ட தீர்மானத்துடன் மீளவழங்கப்படும்.

 

மேலதிக தகவல்களுக்கு- 0242222591

Back To Top