skip to Main Content

வழிகாட்டல் செயலமர்வு

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் அனுசரணையில், வவுனியாப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் அலகினால், பல்கலைக்கழக அனுமதி தொடர்பான வழிகாட்டல் செயலமர்வு பம்பைமடு பிரதான வளாகத்தில் 30.04.2026 அன்று காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 1.00 மணி வரை நடைபெற்றது. இச் செயலமர்வில் பல்கலைக்கழகங்களில் காணப்படும் கற்கை நெறிகள் தொடர்பாகவும், விண்ணப்படிவத்தினை பூர்த்தி செய்தல்,…

Read More

தாக சாந்தி நிலையம்

வவுனியா ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தால் இன்றைய தினம் ( 30.04.2026) தாக சாந்தி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு பக்தர்களின் தாகம் தீர்க்கப் பெற்றது.    

Read More

சங்க பாலர் பாடசாலை புதுவருட பிறப்பு

சங்க பாலர் பாடசாலை மாணவர்கள் தமது புதுவருட பிறப்பு நிகழ்வினை இன்று கொண்டாடி மகிழ்ந்தனர்.இவர்களுக்கு கைவிசேடமும் வழங்கி வைக்கப்பட்டது.  

Read More

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் 2026.*

மேற்படி பொதுக் கூட்டமானது *12.04.2026* ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 மணிக்கு சங்கத்தின் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

Read More

பெற்றார்களுடனான கலந்துரையாடல்

சங்க பாலர் பாடசாலையின் 1ஆம் தவணைக்கான பெற்றார்களுடனான கலந்துரையாடல் இன்று (08.02.2026) நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் முன் பள்ளி சிறார்களின் கற்றல் விருத்தியில் பெற்றாரின் பங்களிப்பு தொடர்பாக முன்னாள் கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதியும் சங்கத்தின் காப்பளர்களில் ஒருவருமாகிய திரு.க.சுவர்ணராஜா அவர்கள் கலந்துரையாடினார். பாடசாலையின் நடைமுறைகள் மற்றும் புதிய கல்விதிட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

Read More

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட நாள்

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட நாள் அதே நேரத்தில் நினைவு கூரும் நிகழ்வு இன்று 19.11.2025 காலை 07.30 மணிக்கு சங்கத்தினை ஆரம்பித்து வைத்த சுவாமி சுத்தானந்த பாரதியாரின் திருவுருவச் சிலையடியில் விளக்கேற்றியும் தீபாராதனை செய்தும் மாலை அணிவித்தும் நினைவுகூரப்பட்டது. 74 வது ஆண்டில் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம்.  

Read More

பாலர் பாடசாலையின் ஆசிரியர் தினம் -2025

சுத்தானந்த இந்து இஞைர் சங்க பாலர் பாடசாலை ஆசிரியர்களை கௌரவிக்கும் முகமாக இன்று ஆட்சி மன்றம் மற்றும் மாணவர்களினால் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றதுடன், ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வில் சங்க முன்பள்ளி ஆசிரியர்களின் ஆக்கங்களை தாங்கிய முதற்படி எனும் நூலும் வெளியிடப்பட்டது.  

Read More

பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் தினம்

சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் தின நிகழ்வுகள் இன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் சிறுவர்கள், ஆசிரியர்களின் நிகழ்வுகளுடன் சிவாலய ஆற்றுகை அரங்கின் சிறுவர் நாடகம் ஒன்றும் சிறுவர்களை மகிழ்வித்தது. மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.  

Read More
Back To Top