கோவிட் – 19 கால உதவிகள் – 2ம் தொகுதி
கொவிட் -19 பெருந் தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வவுனியா மாவட்டத்ததைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால் உலருணவுப் பொதிகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது. இவ் உதவிகள் கள்ளிக்குளம், பெரிய உலுக்குளம் மற்றும் ஏனைய கிராமங்களைச் சேர்ந்த, மாற்று திறனாளி உள்ள குடும்பம், பெண் தலைமை தாங்கும் குடும்பம், தனிமைபடுத்தலுக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
இதற்கான நிதியுதவியினை சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு நா.தர்மராஜா (அகளங்கன் ஆசிரியர்) அவர்கள் ரூபா 50,000.00 ம் அவுஸ்ரேலியாவில் வசிக்கும் திருமதி வாசுகிதேவி மகாதேவன் ரூபா 30,000.00 ம் சங்கத்தின் தற்போதய தலைவரும் வைத்தியருமான ப.சத்தியநாதன் ரூபா 20,000.00 வழங்கியிருந்தனர்.
இவ் செயற்பாட்டிற்கு நிதியுதவி வழங்கிய நல்லுள்ளங்களுக்கும், பொருட்களை பொதி செய்து வழங்கிய நல்லுள்ளங்களுக்கும் சங்கத்தின் நன்றிகள்.