விவேகானந்தரின் ஜனன தின நிகழ்வு
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கமும் வவுனியா நகரசபையும் இணைந்து சுவாமி விவேகானந்தரின் ஜனன தின நிகழ்வினை சங்கத்தின் வட மேற்கு மூலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலையடியில் ஏற்ப்பாடு செய்திருந்தனர்.
சங்கத்தின் தலைவர் மருத்துவர் ப.சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியதுடன் அவரது திருவுருவச் சிலைக்கு  மாலையும் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து திரு. நா.தர்மராஜா (தமிழ்மணி அகளங்கன்) அவர்கள் விவேகானந்தரின் வாழ்கை வரலாறு, சிக்காகோ விஜயம் மற்றும் இலங்கை விஜயம் தொடர்பாக உரையாற்றினார். இறுதியில் நகரசபையின் உப தவிசாளரின் நன்றியுரையுடனும் சங்கத்தின் தேனீர் உபசாரத்துடனும் நிறைவு பெற்றது.

 
 


 
  
  
  
  
 
 
 

 
											 
											