திருஞானசம்பந்த மூர்த்திநாயனார் குருபூசை
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் திருஞானசம்பந்த மூர்த்திநாயனார் குருபூசை இன்று சிறப்பாக நடைபெற்றது. சங்க பாலர் பாடசாலை மாணவர்கள் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் வேடம் தாங்கியும், அவர் அருளிய பதிகங்களைப்பாடியும், அவரின் வரலாறு, அற்புதங்கள் தொடர்பாக உரையாற்றி சிறப்பித்தனர். பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டனர்.