பாலர் பாடசாலையின் 30வது விளையாட்டு விழா
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 30 வது விளையாட்டு விழா 06.07.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுகளில் பங்குபற்றி தமது செயற்பாடுகளை நிறைவு செய்த சிறுவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தலைவர் மருத்துவர் ப.சத்தியநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில், வவுனியா தெற்கு கல்வி வலைய வலையக் கல்விப்பணிப்பாளர் திரு.தர்மலிங்கம் முகுந்தன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், சங்க பாலர் பாடசாலையில் 1996ஃ1997 ஆண்டுகளில் ஆரம்பக்கல்வி பயின்று தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்திய கலாநிதி ராஜ்குமார் குகப்பிரகாஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், இந்து கலாசார உத்தியோகஸ்தர், இந்து கலாசார திணைக்களம் வவுனியா பிரம்மஸ்ரீ எஸ். குகனேஸ்வரசர்மா மற்றும் வவுனியா தெற்கு கல்வி வலையத்தின் நகரம் 1 இன் ஒருங்கிணைப்பாளர் திருமதி நிரூபா சச்சிதானந்தம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.