தாகசாந்தி நிலையம்
வவுனியா கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தால் இன்று தாகசாந்தி நிலையம் அமைக்கப்பெற்றது.
வவுனியா கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தால் இன்று தாகசாந்தி நிலையம் அமைக்கப்பெற்றது.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால் இன்றய தினம் வருமானம் குறைந்த குடும்பங்களை சேர்ந்த 20 மாணர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதற்கான அனுசரணையை திரு.நிரூஷன் அவர்கள் வழங்கியிருந்தார்.
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும் வவுனியா நகரசபை ஆகியன இணைந்து சுவாமி விவகானந்தரை அவரது பிறந்த நாளில் இன்று நினைவு கூர்ந்தனர்.இந்நிகழ்வில் தமிழ்மணி அகளங்கன் அவர்களின் சிறப்புரையும் இளம் சிறார்களின் உரைகளும் இடம் பெற்றது. உரையாற்றிய சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.
வவுனியாவில் இயங்கும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களில் ஒரு தொகுதியினருக்கான செயலமர்வினை சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் இன்று நடாத்தியது. இவ்வமர்வில் 38 அறநெறி ஆசிரியர்கள் பங்குபற்றினர். வளவாளர்களாக திரு.சுவர்ணராஜா (சங்க காப்பாளரும், ஓய்வுநிலை பீடாதிபதியும்- வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி), திரு.த.தர்மேந்திரா,(உதவி பிரதேச செயலாளர், வெங்கல செட்டிகுள பிரதேச செயலகம்), திரு.சி.கஜேந்திரகுமார் (இந்து கலாசார உத்தியோகஸ்தர்…
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும் புலம்பெயர் நண்பர்களின் நிதி பங்களிப்பில், பிரதேச செயலாளர்களின் வேண்டு கோளின் பெயரில், பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள்,தறப்பாள்கள் எனபனவற்றை உதவி பிரதேச செயலாளர், கிராம அலுவலர்கள் மற்றும் செயலக உத்தியோகஸ்தர்கள் முன்னிலையில் வழங்கிவைக்கப்பெற்றது.
வ/மூன்றுமுறிப்பு அ.த.க பாடசாலையினால் வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பெற்ற கரம் தரப்படுத்தல் சுற்றுப் போட்டிக்கு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் அனுசரணை வழங்கியிருந்தது. இப் போட்டியில் 230 மாணவர்கள் பங்குபற்றியதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்,வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பெற்றது.
திருக்கோணேச்சர ஆலயத்தின் கொடியேற்ற விழாவிற்கு திருக்கேதீச்சரத்திலிருந்து புனித தீர்த்தம் எடுத்துச்செல்லும் அடியவர்கள் 11.04.2025 அன்று சங்கத்திற்கு வருகை தந்து இளைப்பாறி சென்றனர்.