ஆடிப்பிறப்பு
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் ஆடிப்பிறப்பு நிகழ்வானது பாலர் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடன் ஆடிகூழ் உடன் பாடல் பாடியும் கொண்டாடப்பட்டது.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் ஆடிப்பிறப்பு நிகழ்வானது பாலர் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடன் ஆடிகூழ் உடன் பாடல் பாடியும் கொண்டாடப்பட்டது.
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 30 வது விளையாட்டு விழா 06.07.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுகளில் பங்குபற்றி தமது செயற்பாடுகளை நிறைவு செய்த சிறுவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். தலைவர் மருத்துவர் ப.சத்தியநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில், வவுனியா தெற்கு கல்வி வலைய வலையக் கல்விப்பணிப்பாளர் திரு.தர்மலிங்கம் முகுந்தன்…
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கதிர்காமம் நோக்கிய இளைஞர்களின் யாத்திரை குழு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கதிற்கு 17.06.2025 வருகை தந்தனர். இவர்கள் இன்று சங்கத்தில் இளைப்பாறி நாளை திருகோணமலை நோக்கி பயணிக்கவுள்ளனர். இவர்களுக்கான உபசரணைகளை சங்கம் மற்றும் நலன்விரும்பிகளும் வழங்கினர். …
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் சித்திரை புதுவருட நிகழ்வு இன்று பாடசாலையில் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் மாணவர்கள் கைவிசேடங்கள் பெற்றும் பலகாரங்கள் உண்டும் மகிழ்ந்தனர். …
வ/மூன்றுமுறிப்பு அ.த.க பாடசாலையினால் வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பெற்ற கரம் தரப்படுத்தல் சுற்றுப் போட்டிக்கு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் அனுசரணை வழங்கியிருந்தது. இப் போட்டியில் 230 மாணவர்கள் பங்குபற்றியதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்,வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பெற்றது.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் -29 வது விளையாட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் சந்தை நிகழ்வானது 30 மே 2024 அன்று பாடசாலையில் நடைபெற்றது.
திருநாவுக்கரசர் நாயனர் குருபூசை தினம். பாலர் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடனும், தண்ணீர் பந்தல் அமைத்தும் அனுஸ்டிக்கப்பட்டது.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் 28 வது விளையாட்டு விழா 23.07.2023 அன்று சங்கத்தின் தலைவர் மருத்துவர்.ப.சத்தியநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி.ம.சபர்ஜா- உதவி மாவட்ட செயலாளர்,வவுனியா, அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு.த.தவேந்திரலிங்கம் - உதவி கல்விப் பணிப்பாளர், ஆரம்ப பிரிவு, வவுனியா தெற்கு கல்வி…
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை யின் 27வது விளையாட்டுப் போட்டி 10.09.2022 சனிக்கிழமை காலை 08.30 மணிக்கு, சங்கத்தின் தலைவர் வைத்தியர் ப.சத்தியநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில், வவுனியா பிரதேச செயலாளர் திரு.நா.கமலதாசன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராக பாலர் பாடசாலையின் பழைய மாணவரும் மருத்துவருமான ரா.மனோராஜ் அவர்களும்…