சுவாமி விவேகானந்தர் ஜனன தினம்
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும் வவுனியா மாநகர சபையும் இணைந்து சுவாமி விவேகானந்தர் ஜனன தினத்தினை புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலையடியில் நினைவு கூர்ந்தனர். இந் நிகழ்வில் சங்க அறநெறி பாடசாலை மாணர்கள் விவேகானந்தர் வேடம் தாங்கி உரையாற்றியதுடன், தமிழ்மணி அகளங்கன் அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றன. உரையாற்றிய சிறுவர்களுக்கு பரிசில்கள் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டனர்.
































