சிவனடியார்களின் இலங்கைக்கான ஆன்மீக பயணம்
உலக சிவனடியார்களின் இலங்கைக்கான சிவாலய ஆன்மீக பயணம்*
இந்தியாவில் இருந்து 180 சிவனடியார்கள் முதல் முதலாக ஒரே தடவையில் சிவபூமி என அழைக்கப்படும் இலங்கை திருநாட்டில் உள்ள ஆலயங்களை தரிசிக்க வருகை தந்தனர். இன்று திருகேதீஸ்வரத்திலிருந்து மட்டகளப்பிற்கு செல்லும் வழியில் இவர்களை சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் வரவேற்று காலை உணவு வழங்கி உபசரித்தனர். இவர்களுக்கான ஒழுங்குகளை மட்டகளப்பு சிவதொண்டர் திருக்கூட்டம் மேற்கொண்டிருந்தது. இவ் பயணத்தில் 280 அடியவர்கள் பங்குபற்றியிருந்தனர்.



















