மாணிக்கவாசக நாயனார் குருபூசை
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் மாணிக்கவாசக நாயனார் குருபூசை இன்று சிறப்பாக நடைபெற்றது. சங்க அறநெறி பாடசாலை மாணவர்கள் மாணிக்கவாசக நாயனார் வேடம் தாங்கியும் தாங்கியும், அவர் அருளிய பதிகங்களைப்பாடியும், அவரின் வரலாறு, அற்புதங்கள் தொடர்பாக உரையாற்றி சிறப்பித்தனர். பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டனர்.
இன்றைய நிகழ்விற்கு பிரசாத அனுசரணையை சுத்தானந்த விலாஸ் சைவஉணகத்தினர் வழங்கினர்.































