புத்தகங்கள் வழங்கல்
கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் ஊடாக ஜெயா புத்தக நிலையத்தினர் பெருமளவிலான ஆங்கில மொழிமூல புத்தகங்களை சங்கத்திற்கு வழங்கியுள்ளனர். இவற்றினை தரம் பிரித்து நூலகங்களுக்கும் பாடசாலைகளுக்கும் வழங்கும் நிகழ்வில் முதல் தொகுதியை புதுக்குளம் மகாவித்தியாலயம், இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை, முஸ்லீம் மகாவித்தியாலயம், , காமினி மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கும், எழுச்சியின் கரங்கள் நூல்நிலையத்திற்கும் வழங்கிவைக்கப்பட்டது. இவற்றினை வழங்கிய ஜெயா புத்தக நிலையத்தினருக்கும், இராமகிருஷ்ண மிஷனுக்கும் எமது நன்றிகள்.














