பாலர் பாடசாலை மாணவர்களின் கலைவிழா -2024
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் கலைவிழாவானது 08.12.2024 (ஞாயிற்றுக்கிழமை) காலை 09.00 மணிக்கு மருத்துவர் ப. சத்தியநாதன் அவர்களின் தலைமையில்நடராஜர் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வவுனியாப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் அ.அற்புதராஜா அவர்களும், சிறப்பு விருந்தினராக வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் திருமதி.ரட்ணா ரமேஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.