skip to Main Content

தாக சாந்தி நிலையம்

வவுனியா அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால் தாக சாந்தி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. சங்கத்தின் இச் செயற்பாட்டுக்கு வாத்திய கலாலயம்,அறிவாலயம் புத்தக நிலையம், க.மு.சுதர்சன், நிர்மலன் குடும்பம் ஆகியோரும் அனுசரணை வழங்கியிருந்தனர்.                     …

Read More

பாலர் பாடசாலை மாணவர்களின் சித்திரை புதுவருட நிகழ்வு

சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் சித்திரை புதுவருட நிகழ்வு இன்று பாடசாலையில் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் மாணவர்கள் கைவிசேடங்கள் பெற்றும் பலகாரங்கள் உண்டும் மகிழ்ந்தனர்.                                         …

Read More

திருநாவுக்கரச நாயனார் குருபூசை

திருநாவுக்கரச நாயனார் குருபூசை இன்று (23.04.2025 ) சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளுடனும் தாகசாந்தி நிலையம் அமைத்தும் அனுஸ்டிக்கப்பட்டது. இந் நிகழ்வில் 21 மாணவர்கள் தேவாரம், உரை, திருநாவுகரச நாயனார் போன்று வேடம் தாங்கியும் தமது திறமைகளை மேடை ஏற்றினர். பங்குகொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டனர். தாக சாந்தி நிலையமும் அமைக்கப்பட்டது.  …

Read More

திருக்கோணேச்சர புனித தீர்த்தம்

திருக்கோணேச்சர ஆலயத்தின் கொடியேற்ற விழாவிற்கு திருக்கேதீச்சரத்திலிருந்து புனித தீர்த்தம் எடுத்துச்செல்லும் அடியவர்கள் இன்று (11.04.2025) சங்கத்திற்கு வருகை தந்து இளைப்பாறி சென்றனர்.  

Read More

தமிழ் கலாசார நிகழ்வு

வவுனியா ஊடாக பயணம் மேற்கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு தமிழ் கலாசார நிகழ்வொன்றினை குறுகிய காலத்தில் சங்கம் ஒழுங்கு செய்து வழங்கியது. இந்த நிகழ்வில் சிதம்பரேஸ்வர நடனாலய மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்வு இடம் பெற்றதுடன் இந் நிகழ்வு சுற்றுலா பயணிகளிடம் நல் வரவேற்பையும் பெற்றது.  

Read More

தாகசாந்தி நிலையம்

வவுனியா கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தால் இன்று தாகசாந்தி நிலையம் அமைக்கப்பெற்றது.        

Read More

கற்றல் உபகரணங்கள் வழங்கல்

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால் இன்றய தினம் வருமானம் குறைந்த குடும்பங்களை சேர்ந்த 20 மாணர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதற்கான அனுசரணையை திரு.நிரூஷன் அவர்கள் வழங்கியிருந்தார்.  

Read More
Back To Top