தாக சாந்தி நிலையம்
24.06.2025 இன்று உக்குளாங்குளம் அருள்மிகு மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி ஆலய தேர்திருவிழாவை முன்னிட்டு காவடிகள் சங்க முன்றலினால் சென்ற போது சங்கத்தினால் தாக சாந்தி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு பக்தர்களின் தாகம் தீர்க்கப்பட்டது.
24.06.2025 இன்று உக்குளாங்குளம் அருள்மிகு மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி ஆலய தேர்திருவிழாவை முன்னிட்டு காவடிகள் சங்க முன்றலினால் சென்ற போது சங்கத்தினால் தாக சாந்தி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு பக்தர்களின் தாகம் தீர்க்கப்பட்டது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கதிர்காமம் நோக்கிய இளைஞர்களின் யாத்திரை குழு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கதிற்கு 17.06.2025 வருகை தந்தனர். இவர்கள் இன்று சங்கத்தில் இளைப்பாறி நாளை திருகோணமலை நோக்கி பயணிக்கவுள்ளனர். இவர்களுக்கான உபசரணைகளை சங்கம் மற்றும் நலன்விரும்பிகளும் வழங்கினர். …
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் திருஞானசம்பந்த மூர்த்திநாயனார் குருபூசை இன்று சிறப்பாக நடைபெற்றது. சங்க பாலர் பாடசாலை மாணவர்கள் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் வேடம் தாங்கியும், அவர் அருளிய பதிகங்களைப்பாடியும், அவரின் வரலாறு, அற்புதங்கள் தொடர்பாக உரையாற்றி சிறப்பித்தனர். பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டனர். …
வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கம் மற்றும் சிதம்பரேஸ்வரம் நடனாலயம் இணைந்து வழங்கிய நாட்டியமாலை ஆடல் நிகழ்வில் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த கலைஞர்கள் மற்றும் சிதம்பரேஸ்வரம் நடனாலய மாணவிகளின் ஆற்றுகைகளுடன் சிறப்பாக நடைபெற்ற தருணங்கள்.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் அனுசரணையுடன் , 21.05.2025 இன்று வவுனியாப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் அலகினால் நடாத்தப்பட்ட பல்கலைக்கழக அனுமதிக்கு தயாராகும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு.
வவுனியா அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால் தாக சாந்தி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. சங்கத்தின் இச் செயற்பாட்டுக்கு வாத்திய கலாலயம்,அறிவாலயம் புத்தக நிலையம், க.மு.சுதர்சன், நிர்மலன் குடும்பம் ஆகியோரும் அனுசரணை வழங்கியிருந்தனர். …
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் சித்திரை புதுவருட நிகழ்வு இன்று பாடசாலையில் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் மாணவர்கள் கைவிசேடங்கள் பெற்றும் பலகாரங்கள் உண்டும் மகிழ்ந்தனர். …
திருநாவுக்கரச நாயனார் குருபூசை இன்று (23.04.2025 ) சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளுடனும் தாகசாந்தி நிலையம் அமைத்தும் அனுஸ்டிக்கப்பட்டது. இந் நிகழ்வில் 21 மாணவர்கள் தேவாரம், உரை, திருநாவுகரச நாயனார் போன்று வேடம் தாங்கியும் தமது திறமைகளை மேடை ஏற்றினர். பங்குகொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டனர். தாக சாந்தி நிலையமும் அமைக்கப்பட்டது. …
திருக்கோணேச்சர ஆலயத்தின் கொடியேற்ற விழாவிற்கு திருக்கேதீச்சரத்திலிருந்து புனித தீர்த்தம் எடுத்துச்செல்லும் அடியவர்கள் இன்று (11.04.2025) சங்கத்திற்கு வருகை தந்து இளைப்பாறி சென்றனர்.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் சந்தை.