நவராத்திரி விழா
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நவராத்திரி விழா இன்று கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகியது. இன்றைய நிகழ்வில் சிதம்பரேஸ்வரம் நடனாலய மாணவியின் நடனம் மற்றும் பாலர் பாடசாலை மாணவியின் உரையும் இடம்பெற்றது.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நவராத்திரி விழா இன்று கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகியது. இன்றைய நிகழ்வில் சிதம்பரேஸ்வரம் நடனாலய மாணவியின் நடனம் மற்றும் பாலர் பாடசாலை மாணவியின் உரையும் இடம்பெற்றது.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க அறநெறி மாணவர்களின் பங்குபற்றலுடன் இன்று சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை அனுஷ்டிக்கப்பெற்றது. சுந்தரர் தேவாரம், அவரின் வரலாறு, நடனம் போன்ற நிகழ்வுகளை மாணவர்கள் வழங்கினர். நிகழ்வுகளை வழங்கியவர்களை வாழ்த்தி பரிசில்களும் வழங்கி வைக்கப்பெற்றன.
வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு இன்று 08.06.2024 சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும் அறிவாலயம் ஆகியன இணைந்து தாகசாந்தி நிலையம் ஒன்றை பூந்தோட்டத்தில் அமைத்திருந்தனர்.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் -29 வது விளையாட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் ஆடிப்பிறப்பு நிகழ்வு. பாலர் பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டது.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் மாணிக்கவாசக நாயனர் குருபூசை . (ஆனி மகம்) பாலர் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடனும் சங்க உறுப்பினர்களுடனும் அனுஸ்டிக்கப்பெற்றது.
உக்குளாங்குளம் அருள்மிகு மீனாட்சி சமேத சுந்தரேஸ்வர பெருமான் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று (04.07.2024) சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால் அமைக்கப்பட்ட தாகசாந்தி நிலையம்.
வவுனியா பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் அலகினால் நடத்தப்படும் பல்கலைக்கழக அனுமதி தொடர்பான விழிப்பூட்டல் கருந்தரங்கு. காலம் - 12.06.2024. நேரம் - 09.30 am- 12.30 pm இடம் - வவுனியா பல்கலைக்கழக வளாகம், பூங்கா வீதி, வவுனியா. பல்கலைக்கழக அனுமதிக்கான படிவம் பூர்த்திசெய்தல், இணையவழி பதிவு மற்றும் பாடத்தெரிவு தொடர்பான வழிகாட்டல்கள் வழங்கப்படும். அனுசரணை…
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் சந்தை நிகழ்வானது 30 மே 2024 அன்று பாடசாலையில் நடைபெற்றது.