skip to Main Content

தாகசாந்தி நிலையம்

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீலக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அறிவாலயம் புத்தக நிலையத்துடன் இணைந்து பூந்தோட்டத்தில் தாகசாந்தி நிலையம் இன்று (28.06.2025) அமைக்கப்பெற்று பக்தர்களின் தாகம் தீர்க்கப்பெற்றது.                                    

Read More

தாக சாந்தி நிலையம்

24.06.2025 இன்று உக்குளாங்குளம் அருள்மிகு மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி ஆலய தேர்திருவிழாவை முன்னிட்டு காவடிகள் சங்க முன்றலினால் சென்ற போது சங்கத்தினால் தாக சாந்தி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு பக்தர்களின் தாகம் தீர்க்கப்பட்டது.                               

Read More

கதிர்காமம் நோக்கிய இளைஞர்களின் யாத்திரை

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கதிர்காமம் நோக்கிய இளைஞர்களின் யாத்திரை குழு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கதிற்கு 17.06.2025 வருகை தந்தனர். இவர்கள் இன்று சங்கத்தில் இளைப்பாறி நாளை திருகோணமலை நோக்கி பயணிக்கவுள்ளனர். இவர்களுக்கான உபசரணைகளை சங்கம் மற்றும் நலன்விரும்பிகளும் வழங்கினர்.                …

Read More

வழிகாட்டல் செயலமர்வு.

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் அனுசரணையுடன் , 21.05.2025 இன்று வவுனியாப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் அலகினால் நடாத்தப்பட்ட பல்கலைக்கழக அனுமதிக்கு தயாராகும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு.            

Read More

திருக்கோணேச்சர புனித தீர்த்தம்

திருக்கோணேச்சர ஆலயத்தின் கொடியேற்ற விழாவிற்கு திருக்கேதீச்சரத்திலிருந்து புனித தீர்த்தம் எடுத்துச்செல்லும் அடியவர்கள் இன்று (11.04.2025) சங்கத்திற்கு வருகை தந்து இளைப்பாறி சென்றனர்.  

Read More

தமிழ் கலாசார நிகழ்வு

வவுனியா ஊடாக பயணம் மேற்கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு தமிழ் கலாசார நிகழ்வொன்றினை குறுகிய காலத்தில் சங்கம் ஒழுங்கு செய்து வழங்கியது. இந்த நிகழ்வில் சிதம்பரேஸ்வர நடனாலய மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்வு இடம் பெற்றதுடன் இந் நிகழ்வு சுற்றுலா பயணிகளிடம் நல் வரவேற்பையும் பெற்றது.  

Read More

தாகசாந்தி நிலையம்

வவுனியா கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தால் இன்று தாகசாந்தி நிலையம் அமைக்கப்பெற்றது.        

Read More

கற்றல் உபகரணங்கள் வழங்கல்

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால் இன்றய தினம் வருமானம் குறைந்த குடும்பங்களை சேர்ந்த 20 மாணர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதற்கான அனுசரணையை திரு.நிரூஷன் அவர்கள் வழங்கியிருந்தார்.  

Read More

சுவாமி விவகானந்தர் நினைவு

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும் வவுனியா நகரசபை ஆகியன இணைந்து சுவாமி விவகானந்தரை அவரது பிறந்த நாளில் இன்று நினைவு கூர்ந்தனர்.இந்நிகழ்வில் தமிழ்மணி அகளங்கன் அவர்களின் சிறப்புரையும் இளம் சிறார்களின் உரைகளும் இடம் பெற்றது. உரையாற்றிய சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.  

Read More

அறநெறி பாடசாலை ஆசிரியர் செயலமர்வு

வவுனியாவில் இயங்கும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களில் ஒரு தொகுதியினருக்கான செயலமர்வினை சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் இன்று நடாத்தியது. இவ்வமர்வில் 38 அறநெறி ஆசிரியர்கள் பங்குபற்றினர். வளவாளர்களாக திரு.சுவர்ணராஜா (சங்க காப்பாளரும், ஓய்வுநிலை பீடாதிபதியும்- வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி), திரு.த.தர்மேந்திரா,(உதவி பிரதேச செயலாளர், வெங்கல செட்டிகுள பிரதேச செயலகம்), திரு.சி.கஜேந்திரகுமார் (இந்து கலாசார உத்தியோகஸ்தர்…

Read More
Back To Top