skip to Main Content

பாலர் பாடசாலையின் ஆசிரியர் தினம் -2025

சுத்தானந்த இந்து இஞைர் சங்க பாலர் பாடசாலை ஆசிரியர்களை கௌரவிக்கும் முகமாக இன்று ஆட்சி மன்றம் மற்றும் மாணவர்களினால் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றதுடன், ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வில் சங்க முன்பள்ளி ஆசிரியர்களின் ஆக்கங்களை தாங்கிய முதற்படி எனும் நூலும் வெளியிடப்பட்டது.  

Read More

நவராத்திரி போட்டிகள் -2025

நவராத்திரியை முன்னிட்டு பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கிடையில் மாலை கட்டுதல், பூ கோரத்தல், கோலம் போடுதல், தோரணம் பின்னுதல், தேவாரம், ஆத்திசூடி, மற்றும் திருக்குறள் மனனம் செய்தல் போன்ற போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டது.

Read More

நவராத்திரி விழா -2025

சங்கத்தின் நவராத்திரி விழா 22.09.2025 காலை கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகி 02.10.2025 விஜயதசமி அன்று ஏடு தொடக்கலுடன் நிறைவு பெற்றது. ஒவ்வொரு நாள் மாலையில் வவுனியாவில் இயங்கி வரும் 9 கலையகங்களின் கலை நிகழ்வுகளும்; நடைபெற்றதுடன் நிகழ்வுகளுக்கு கானாமிருத கலாலயம், நிருத்திய நிகேதன நுண்கலைக்கல்லூரி, அமுதேஸ்வரா சைவ உணவகம், திரு.க.மு.சுதர்சன், சிதம்பரேஸ்வரம் நடனாலயம், வாத்திய கலாலயம்,…

Read More

பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் தினம்

சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் தின நிகழ்வுகள் இன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் சிறுவர்கள், ஆசிரியர்களின் நிகழ்வுகளுடன் சிவாலய ஆற்றுகை அரங்கின் சிறுவர் நாடகம் ஒன்றும் சிறுவர்களை மகிழ்வித்தது. மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.  

Read More

சிவனடியார்களின் இலங்கைக்கான ஆன்மீக பயணம்

உலக சிவனடியார்களின் இலங்கைக்கான சிவாலய ஆன்மீக பயணம்* இந்தியாவில் இருந்து 180 சிவனடியார்கள் முதல் முதலாக ஒரே தடவையில் சிவபூமி என அழைக்கப்படும் இலங்கை திருநாட்டில் உள்ள ஆலயங்களை தரிசிக்க வருகை தந்தனர். இன்று திருகேதீஸ்வரத்திலிருந்து மட்டகளப்பிற்கு செல்லும் வழியில் இவர்களை சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் வரவேற்று காலை உணவு வழங்கி உபசரித்தனர். இவர்களுக்கான…

Read More

வேல்தாங்கிய பாதயாத்திரை

வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு12 வது தடவையாக வேல்தாங்கிய பாதயாத்திரை மேற்கொண்ட அடியவர்கள் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்திற்கு வருகை ந்து, நடராஜர் மண்டபத்தில் இளைப்பாறி பஜணை செய்து தமது பாதயாத்திரையினை தொடர்ந்தனர்.      

Read More

சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை இன்று சிறப்பாக நடைபெற்றது. சங்க பாலர் பாடசாலை மாணவர்கள் சுந்தரமூர்த்தி நாயனார் வேடம் தாங்கியும் தாங்கியும், அவர் அருளிய பதிகங்களைப் பாடியும், அவரின் வரலாறு, அற்புதங்கள் தொடர்பாக உரையாற்றி சிறப்பித்தனர். பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டனர்.  

Read More

கூத்து கலை

சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களுக்கு எமது பாரம்பரிய கூத்து கலையை அறிமுகம் செய்ததுடன் அவர்களுக்கான மனவெழுச்சி செயற்பாடகவும் இன்று சிவாலய ஆற்றுகை அரங்கினர் தமது கூத்து ஆற்றுகையினை வழங்கியிருந்தனர். மாணவர்கள் ஆர்வத்துடன் மகிழ்ந்திருந்தனர். ஆற்றுகையை வழங்கிய கலைஞர்களுக்கும் அதன் இயக்குனர் திரு. வி.விஜயகுமார் அவர்களுக்கும் எமது நன்றிகள்.

Read More

பிரதேச பண்பாட்டு விழா

tஇன்று வவுனியாவில் நடைபெற்ற பண்பாட்டு ஊர்திப் பவனியும் பிரதேச பண்பாட்டு விழாவும் நிகழ்வில் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் தனது பங்களிப்பாக வடிவமைத்து பவனிவந்த ஊர்திகள். 1. வவுனியாவின் அடையாளங்களில் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் 2.தமிழர் வாழ்வியலில் பண்டைய கால பொருட்கள் தானிய உணவும் ஆரோக்கிய வாழ்வு

Read More

ஆடிப்பிறப்பு

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் ஆடிப்பிறப்பு நிகழ்வானது பாலர் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடன் ஆடிகூழ் உடன் பாடல் பாடியும் கொண்டாடப்பட்டது.        

Read More
Back To Top