tஇன்று வவுனியாவில் நடைபெற்ற பண்பாட்டு ஊர்திப் பவனியும் பிரதேச பண்பாட்டு விழாவும் நிகழ்வில் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் தனது பங்களிப்பாக வடிவமைத்து பவனிவந்த ஊர்திகள். 1. வவுனியாவின் அடையாளங்களில் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் 2.தமிழர் வாழ்வியலில் பண்டைய கால பொருட்கள் தானிய உணவும் ஆரோக்கிய வாழ்வும்,
ஆடிப்பிறப்பு
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் ஆடிப்பிறப்பு நிகழ்வானது பாலர் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடன் ஆடிகூழ் உடன் பாடல் பாடியும் கொண்டாடப்பட்டது.
பாலர் பாடசாலையின் 30வது விளையாட்டு விழா
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 30 வது விளையாட்டு விழா 06.07.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுகளில் பங்குபற்றி தமது செயற்பாடுகளை நிறைவு செய்த சிறுவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். தலைவர் மருத்துவர் ப.சத்தியநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில், வவுனியா தெற்கு கல்வி வலைய வலையக் கல்விப்பணிப்பாளர் திரு.தர்மலிங்கம் முகுந்தன்…
மாணிக்கவாசக நாயனார் குருபூசை
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் மாணிக்கவாசக நாயனார் குருபூசை இன்று சிறப்பாக நடைபெற்றது. சங்க அறநெறி பாடசாலை மாணவர்கள் மாணிக்கவாசக நாயனார் வேடம் தாங்கியும் தாங்கியும், அவர் அருளிய பதிகங்களைப்பாடியும், அவரின் வரலாறு, அற்புதங்கள் தொடர்பாக உரையாற்றி சிறப்பித்தனர். பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டனர். இன்றைய நிகழ்விற்கு பிரசாத அனுசரணையை சுத்தானந்த விலாஸ் சைவஉணகத்தினர்…
தாகசாந்தி நிலையம்
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீலக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அறிவாலயம் புத்தக நிலையத்துடன் இணைந்து பூந்தோட்டத்தில் தாகசாந்தி நிலையம் இன்று (28.06.2025) அமைக்கப்பெற்று பக்தர்களின் தாகம் தீர்க்கப்பெற்றது.
தாக சாந்தி நிலையம்
24.06.2025 இன்று உக்குளாங்குளம் அருள்மிகு மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி ஆலய தேர்திருவிழாவை முன்னிட்டு காவடிகள் சங்க முன்றலினால் சென்ற போது சங்கத்தினால் தாக சாந்தி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு பக்தர்களின் தாகம் தீர்க்கப்பட்டது.
கதிர்காமம் நோக்கிய இளைஞர்களின் யாத்திரை
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கதிர்காமம் நோக்கிய இளைஞர்களின் யாத்திரை குழு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கதிற்கு 17.06.2025 வருகை தந்தனர். இவர்கள் இன்று சங்கத்தில் இளைப்பாறி நாளை திருகோணமலை நோக்கி பயணிக்கவுள்ளனர். இவர்களுக்கான உபசரணைகளை சங்கம் மற்றும் நலன்விரும்பிகளும் வழங்கினர். …
திருஞானசம்பந்த மூர்த்திநாயனார் குருபூசை
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் திருஞானசம்பந்த மூர்த்திநாயனார் குருபூசை இன்று சிறப்பாக நடைபெற்றது. சங்க பாலர் பாடசாலை மாணவர்கள் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் வேடம் தாங்கியும், அவர் அருளிய பதிகங்களைப்பாடியும், அவரின் வரலாறு, அற்புதங்கள் தொடர்பாக உரையாற்றி சிறப்பித்தனர். பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டனர். …
நாட்டியமாலை ஆடல் நிகழ்வு
வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கம் மற்றும் சிதம்பரேஸ்வரம் நடனாலயம் இணைந்து வழங்கிய நாட்டியமாலை ஆடல் நிகழ்வில் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த கலைஞர்கள் மற்றும் சிதம்பரேஸ்வரம் நடனாலய மாணவிகளின் ஆற்றுகைகளுடன் சிறப்பாக நடைபெற்ற தருணங்கள்.
வழிகாட்டல் செயலமர்வு.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் அனுசரணையுடன் , 21.05.2025 இன்று வவுனியாப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் அலகினால் நடாத்தப்பட்ட பல்கலைக்கழக அனுமதிக்கு தயாராகும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு.