skip to Main Content

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட நாள்

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட நாள் அதே நேரத்தில் நினைவு கூரும் நிகழ்வு இன்று 19.11.2025 காலை 07.30 மணிக்கு சங்கத்தினை ஆரம்பித்து வைத்த சுவாமி சுத்தானந்த பாரதியாரின் திருவுருவச் சிலையடியில் விளக்கேற்றியும் தீபாராதனை செய்தும் மாலை அணிவித்தும் நினைவுகூரப்பட்டது. 74 வது ஆண்டில் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம்.  

Read More

பாலர் பாடசாலையின் ஆசிரியர் தினம் -2025

சுத்தானந்த இந்து இஞைர் சங்க பாலர் பாடசாலை ஆசிரியர்களை கௌரவிக்கும் முகமாக இன்று ஆட்சி மன்றம் மற்றும் மாணவர்களினால் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றதுடன், ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வில் சங்க முன்பள்ளி ஆசிரியர்களின் ஆக்கங்களை தாங்கிய முதற்படி எனும் நூலும் வெளியிடப்பட்டது.  

Read More

பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் தினம்

சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் தின நிகழ்வுகள் இன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் சிறுவர்கள், ஆசிரியர்களின் நிகழ்வுகளுடன் சிவாலய ஆற்றுகை அரங்கின் சிறுவர் நாடகம் ஒன்றும் சிறுவர்களை மகிழ்வித்தது. மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.  

Read More

சிவனடியார்களின் இலங்கைக்கான ஆன்மீக பயணம்

உலக சிவனடியார்களின் இலங்கைக்கான சிவாலய ஆன்மீக பயணம்* இந்தியாவில் இருந்து 180 சிவனடியார்கள் முதல் முதலாக ஒரே தடவையில் சிவபூமி என அழைக்கப்படும் இலங்கை திருநாட்டில் உள்ள ஆலயங்களை தரிசிக்க வருகை தந்தனர். இன்று திருகேதீஸ்வரத்திலிருந்து மட்டகளப்பிற்கு செல்லும் வழியில் இவர்களை சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் வரவேற்று காலை உணவு வழங்கி உபசரித்தனர். இவர்களுக்கான…

Read More

சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை இன்று சிறப்பாக நடைபெற்றது. சங்க பாலர் பாடசாலை மாணவர்கள் சுந்தரமூர்த்தி நாயனார் வேடம் தாங்கியும் தாங்கியும், அவர் அருளிய பதிகங்களைப் பாடியும், அவரின் வரலாறு, அற்புதங்கள் தொடர்பாக உரையாற்றி சிறப்பித்தனர். பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டனர்.  

Read More

கூத்து கலை

சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களுக்கு எமது பாரம்பரிய கூத்து கலையை அறிமுகம் செய்ததுடன் அவர்களுக்கான மனவெழுச்சி செயற்பாடகவும் இன்று சிவாலய ஆற்றுகை அரங்கினர் தமது கூத்து ஆற்றுகையினை வழங்கியிருந்தனர். மாணவர்கள் ஆர்வத்துடன் மகிழ்ந்திருந்தனர். ஆற்றுகையை வழங்கிய கலைஞர்களுக்கும் அதன் இயக்குனர் திரு. வி.விஜயகுமார் அவர்களுக்கும் எமது நன்றிகள்.

Read More

பிரதேச பண்பாட்டு விழா

tஇன்று வவுனியாவில் நடைபெற்ற பண்பாட்டு ஊர்திப் பவனியும் பிரதேச பண்பாட்டு விழாவும் நிகழ்வில் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் தனது பங்களிப்பாக வடிவமைத்து பவனிவந்த ஊர்திகள். 1. வவுனியாவின் அடையாளங்களில் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் 2.தமிழர் வாழ்வியலில் பண்டைய கால பொருட்கள் தானிய உணவும் ஆரோக்கிய வாழ்வு

Read More

ஆடிப்பிறப்பு

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் ஆடிப்பிறப்பு நிகழ்வானது பாலர் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடன் ஆடிகூழ் உடன் பாடல் பாடியும் கொண்டாடப்பட்டது.        

Read More
Back To Top