வழிகாட்டல் செயலமர்வு.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் அனுசரணையுடன் , 21.05.2025 இன்று வவுனியாப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் அலகினால் நடாத்தப்பட்ட பல்கலைக்கழக அனுமதிக்கு தயாராகும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் அனுசரணையுடன் , 21.05.2025 இன்று வவுனியாப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் அலகினால் நடாத்தப்பட்ட பல்கலைக்கழக அனுமதிக்கு தயாராகும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு.
திருக்கோணேச்சர ஆலயத்தின் கொடியேற்ற விழாவிற்கு திருக்கேதீச்சரத்திலிருந்து புனித தீர்த்தம் எடுத்துச்செல்லும் அடியவர்கள் இன்று (11.04.2025) சங்கத்திற்கு வருகை தந்து இளைப்பாறி சென்றனர்.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் சந்தை.
வவுனியா ஊடாக பயணம் மேற்கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு தமிழ் கலாசார நிகழ்வொன்றினை குறுகிய காலத்தில் சங்கம் ஒழுங்கு செய்து வழங்கியது. இந்த நிகழ்வில் சிதம்பரேஸ்வர நடனாலய மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்வு இடம் பெற்றதுடன் இந் நிகழ்வு சுற்றுலா பயணிகளிடம் நல் வரவேற்பையும் பெற்றது.
வவுனியா கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தால் இன்று தாகசாந்தி நிலையம் அமைக்கப்பெற்றது.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால் இன்றய தினம் வருமானம் குறைந்த குடும்பங்களை சேர்ந்த 20 மாணர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதற்கான அனுசரணையை திரு.நிரூஷன் அவர்கள் வழங்கியிருந்தார்.
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும் வவுனியா நகரசபை ஆகியன இணைந்து சுவாமி விவகானந்தரை அவரது பிறந்த நாளில் இன்று நினைவு கூர்ந்தனர்.இந்நிகழ்வில் தமிழ்மணி அகளங்கன் அவர்களின் சிறப்புரையும் இளம் சிறார்களின் உரைகளும் இடம் பெற்றது. உரையாற்றிய சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.
வவுனியாவில் இயங்கும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களில் ஒரு தொகுதியினருக்கான செயலமர்வினை சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் இன்று நடாத்தியது. இவ்வமர்வில் 38 அறநெறி ஆசிரியர்கள் பங்குபற்றினர். வளவாளர்களாக திரு.சுவர்ணராஜா (சங்க காப்பாளரும், ஓய்வுநிலை பீடாதிபதியும்- வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி), திரு.த.தர்மேந்திரா,(உதவி பிரதேச செயலாளர், வெங்கல செட்டிகுள பிரதேச செயலகம்), திரு.சி.கஜேந்திரகுமார் (இந்து கலாசார உத்தியோகஸ்தர்…