சுவாமி விவேகானந்தர் ஜனன தினம்
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும் வவுனியா மாநகர சபையும் இணைந்து சுவாமி விவேகானந்தர் ஜனன தினத்தினை புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலையடியில் நினைவு கூர்ந்தனர். இந் நிகழ்வில் சங்க அறநெறி பாடசாலை மாணர்கள் விவேகானந்தர் வேடம் தாங்கி உரையாற்றியதுடன், தமிழ்மணி அகளங்கன் அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றன. உரையாற்றிய சிறுவர்களுக்கு பரிசில்கள்…
புத்தகங்கள் வழங்கல்
கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் ஊடாக ஜெயா புத்தக நிலையத்தினர் பெருமளவிலான ஆங்கில மொழிமூல புத்தகங்களை சங்கத்திற்கு வழங்கியுள்ளனர். இவற்றினை தரம் பிரித்து நூலகங்களுக்கும் பாடசாலைகளுக்கும் வழங்கும் நிகழ்வில் முதல் தொகுதியை புதுக்குளம் மகாவித்தியாலயம், இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை, முஸ்லீம் மகாவித்தியாலயம், , காமினி மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கும், எழுச்சியின் கரங்கள் நூல்நிலையத்திற்கும் வழங்கிவைக்கப்பட்டது. இவற்றினை…
திருவாசகம் முற்றோதல்
திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சங்கத்தில் இன்று நடைபெற்றது.இந் நிகழ்வில் பங்கு கொண்ட அடியவர்களுக்கு திருவாசக புத்தகமும் வழங்கப்பட்டது.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட நாள்
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட நாள் அதே நேரத்தில் நினைவு கூரும் நிகழ்வு இன்று 19.11.2025 காலை 07.30 மணிக்கு சங்கத்தினை ஆரம்பித்து வைத்த சுவாமி சுத்தானந்த பாரதியாரின் திருவுருவச் சிலையடியில் விளக்கேற்றியும் தீபாராதனை செய்தும் மாலை அணிவித்தும் நினைவுகூரப்பட்டது. 74 வது ஆண்டில் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம்.
நவராத்திரி விழா -2025
சங்கத்தின் நவராத்திரி விழா 22.09.2025 காலை கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகி 02.10.2025 விஜயதசமி அன்று ஏடு தொடக்கலுடன் நிறைவு பெற்றது. ஒவ்வொரு நாள் மாலையில் வவுனியாவில் இயங்கி வரும் 9 கலையகங்களின் கலை நிகழ்வுகளும்; நடைபெற்றதுடன் நிகழ்வுகளுக்கு கானாமிருத கலாலயம், நிருத்திய நிகேதன நுண்கலைக்கல்லூரி, அமுதேஸ்வரா சைவ உணவகம், திரு.க.மு.சுதர்சன், சிதம்பரேஸ்வரம் நடனாலயம், வாத்திய கலாலயம்,…
பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் தினம்
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் தின நிகழ்வுகள் இன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் சிறுவர்கள், ஆசிரியர்களின் நிகழ்வுகளுடன் சிவாலய ஆற்றுகை அரங்கின் சிறுவர் நாடகம் ஒன்றும் சிறுவர்களை மகிழ்வித்தது. மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.
கூத்து கலை
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களுக்கு எமது பாரம்பரிய கூத்து கலையை அறிமுகம் செய்ததுடன் அவர்களுக்கான மனவெழுச்சி செயற்பாடகவும் இன்று சிவாலய ஆற்றுகை அரங்கினர் தமது கூத்து ஆற்றுகையினை வழங்கியிருந்தனர். மாணவர்கள் ஆர்வத்துடன் மகிழ்ந்திருந்தனர். ஆற்றுகையை வழங்கிய கலைஞர்களுக்கும் அதன் இயக்குனர் திரு. வி.விஜயகுமார் அவர்களுக்கும் எமது நன்றிகள்.
பாலர் பாடசாலையின் 30வது விளையாட்டு விழா
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 30 வது விளையாட்டு விழா 06.07.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுகளில் பங்குபற்றி தமது செயற்பாடுகளை நிறைவு செய்த சிறுவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். தலைவர் மருத்துவர் ப.சத்தியநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில், வவுனியா தெற்கு கல்வி வலைய வலையக் கல்விப்பணிப்பாளர் திரு.தர்மலிங்கம் முகுந்தன்…
