நவராத்திரி விழா
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நவராத்திரி விழா இன்று கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகியது. இன்றைய நிகழ்வில் சிதம்பரேஸ்வரம் நடனாலய மாணவியின் நடனம் மற்றும் பாலர் பாடசாலை மாணவியின் உரையும் இடம்பெற்றது.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நவராத்திரி விழா இன்று கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகியது. இன்றைய நிகழ்வில் சிதம்பரேஸ்வரம் நடனாலய மாணவியின் நடனம் மற்றும் பாலர் பாடசாலை மாணவியின் உரையும் இடம்பெற்றது.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க அறநெறி மாணவர்களின் பங்குபற்றலுடன் இன்று சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை அனுஷ்டிக்கப்பெற்றது. சுந்தரர் தேவாரம், அவரின் வரலாறு, நடனம் போன்ற நிகழ்வுகளை மாணவர்கள் வழங்கினர். நிகழ்வுகளை வழங்கியவர்களை வாழ்த்தி பரிசில்களும் வழங்கி வைக்கப்பெற்றன.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் ஆடிப்பிறப்பு நிகழ்வு. பாலர் பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டது.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் மாணிக்கவாசக நாயனர் குருபூசை . (ஆனி மகம்) பாலர் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடனும் சங்க உறுப்பினர்களுடனும் அனுஸ்டிக்கப்பெற்றது.
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க அறநெறி பாடசாலை மாணவர்களின் பங்கு பற்றலுடன் இன்று (25.05.2024) நடைபெற்ற திருஞானசம்பந்தர் குருபூசை. இந்நிகழ்வில் இந்தியாவிலிருந்து வருகை யோகிக் இன்சயிட்ஸ் அறகட்டளையின் உறுப்பினர்கள்,சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் அறநெறி மாணவர்களால் உரைகள், திருஞான சம்பந்தர் திருமுறைகள் பாடப்பெற்றும் அனுஸ்டிக்கப்பெற்றது. …
திருக்கோணேச்சர ஆலயத்தின் கொடியேற்ற விழாவிற்கு திருக்கேதீச்சரத்திலிருந்து புனித தீர்த்தம் எடுத்துச்செல்லும் அடியவர்கள் 11.04.2025 அன்று சங்கத்திற்கு வருகை தந்து இளைப்பாறி சென்றனர்.
சங்கத்தின் தை பொங்கல் நிகழ்வானது 15.01.2024 காலை சங்க முன்றலில் நடைபெற்றது.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும் அதன் அறநெறி பாடசாலை மாணவர்கள் மற்றும் கலைப் பயிற்சி மாணவர்கள் ஆகியோர்களால் திருநாவுகரச நாயனார் குருபூசையினை இன்று சங்க நடராஜர் மண்டபத்தில் அனுஸ்டித்ததுடன், தண்ணீர்பந்தலும் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு மோர் வழங்கப்பட்டது.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் 70 ஆண்டுகள் நிறைவு விழா 03.12.2022 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு சங்கத்தின் தலைவர் மருத்துவர் ப.சத்தியநாதன் அவர்களின் தலைமையில் கந்தசுவாமி கோயிலில் இருந்து சமய,கலாசார ஊர்லத்துடன் ஆரம்பமாகியது. இவ் ஊர்வலத்தில் விருந்தினர்கள் மற்றும் பாலர் பாடசாலை சிறார்கள், சமய பெரியார்கள் மற்றும் இந்துமத கடவுள்களின் வேடம் தரித்து அணிவகுத்தனர்…
சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் 125 வது வருட நிறைவு விழாவினை வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும் இராமகிருஸ்ண மிஷன் ஆகியன இணைந்து 22.01.2022 அன்று வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நடராஜர் மண்டபத்தில் நடாத்தியிருந்தனர். நிகழ்வானது சங்கத்தின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சுவாமி ஹரிவ்ரதானந்த மஹராஜ்…